search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயர்நீதிமன்ற மதுரை கிளை
    X
    உயர்நீதிமன்ற மதுரை கிளை

    புலம்பெயர் தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை வெட்கக்கேடானது- நீதிபதிகள் வேதனை

    சொந்த ஊர்களுக்கு செல்ல மறுக்கும் தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை வெட்கமாக உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
    மதுரை:

    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க கோரியும், அரசு உதவி செய்ய கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, சொந்த ஊர்களுக்கு செல்ல மறுக்கும் தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை வெட்கமாக உள்ளது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

    புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பணிக்காக பயன்படுத்தி விட்டு இப்போது கண்டுகொள்ளாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல.  புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    தமிழகத்தில் பதிவு செய்யப்படாத, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அத்துடன் வழக்கின் விசாரணையை ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 
    Next Story
    ×