search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கோவையில் வெவ்வேறு விபத்து- வாலிபர் உள்பட 5 பேர் பலி

    கோவையில் வெவ்வேறு விபத்தில் வாலிபர் உள்பட 5 பேர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரமடை:

    கோவை கரடிமடை மத்திபாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ். இவரது மனைவி மாரி (47). கூலித்தொழிலாளி. மற்றும் அதே பகுதியை சேர்ந்த சின்னபையனின் மனைவி பாப்பம்மாள் (65) ஆகியோர் ஆலமரம் மேடு பகுதியில் நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த வேன் இருவரும் நிற்பதை பார்க்காமல் பின்னோக்கி வந்து மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு மாரியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். பாப்பம்மாள் சிகிச்சை பெற்று வருகிறார்.

    காரமடை பெத்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (28). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளிர்காடு அருகே வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    கோவை காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (50). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று இவர் ஆட்டோவில் மருதமலை அருகே வந்தார். அப்போது திடீரென ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த ரங்கநாதனை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    காரமடையை சேர்ந்தவர் மூர்த்தி (44). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் பெள்ளாதி அருகே வந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென எதிர்பாராதவிதமாக மூர்த்தி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மூர்த்தி பலத்த பலத்த காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அரியலூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (52). சம்பவத்தன்று இவர் சிங்காநல்லூர் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மொபட் ராஜேந்திரன் மீது மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    Next Story
    ×