search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை வானிலை ஆய்வு மையம்
    X
    சென்னை வானிலை ஆய்வு மையம்

    2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

    வெப்ப சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வெப்ப சலனம் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கும், தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, கோவை, நீலகிரி, சேலம் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாலத்தீவு பகுதிகளில் சூறைக் காற்று மணிக்கு 36-45 கீமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் தென்காசியில் 4 சென்டி மீட்டர் மழையும், ஆயக்குடியில் 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

    சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×