என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  சென்னையில் எங்கு கொரோனா பாதிப்பு அதிகம்- மாநகராட்சி அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
  சென்னை:

  தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1520ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 457  பேர்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு நேற்று இருவர் உயிரிழந்துள்ளதால் பலியானோரின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.

  அதிகபட்சமாக சென்னையில் நேற்று 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை 303-ஆக உயர்ந்துள்ளது.

  சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

  வடசென்னை பகுதியான ராயபுரத்தில் 92 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  திரு.வி.க.நகரில் 39 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 31 பேருக்கும், அண்ணாநகரில் 27 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

  தண்டையார்பேட்டையில் 37 பேரும், தேனாம்பேட்டையில் 38 பேரும்,  திருவொற்றியூரில் 9 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருங்குடி, அடையாறில் தலா 7 பேருக்கும், வளசரவாக்கம் 5 பேருக்கும், கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  ஆலந்தூரில் 5 பேருக்கும், மாதவரத்தில் 3 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 2 பேருக்கும் பாதிப்பு  உள்ளது. மணலி, அம்பத்தூர் மண்டலங்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. 
  Next Story
  ×