search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வசந்தகுமார் எம்.பி.
    X
    வசந்தகுமார் எம்.பி.

    வேலை நேரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டால் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்- வசந்தகுமார் எம்.பி. வலியுறுத்தல்

    வேலை நேரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டால் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று வசந்தகுமார் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

    நாகர்கோவில்:

    வசந்தகுமார் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கொரோனா தாக்குதல் உலகம் முழுவதும் பரவலாக இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை அனைவரும் கட்டுக்கோப்பாக இருந்து ஒத்துழைப்பதினால் தாக்கம் சற்று குறைவாக இருக்கிறது. குமரி மாவட்ட மக்களும் கட்டுக்கோப்பாக இருப்பதினால் கொரோனாவின் தாக்கம் குறைவாக இருக்கிறது.

    இந்த இக்கட்டான நேரத்திலும் இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் பெட்ரோல், டீல், எரிவாயு போன்றவற்றை தடையின்றி கொடுத்து வரு கிறது. பணியாளர்களும் இன்முகத்துடன் பணி செய்கின்றனர். இந்த சேவையை நாம் பாராட்ட வேண்டும்.

    அது மட்டுமல்ல, இரவு பகலாக சேவை செய்கின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்களுக்கு பணி நேரத்தில் ஏதாவது தொற்று ஏற்பட்டால் அவர்களுக்கு ரூ.2 லட்சம் தமிழக அரசு அறிவித்துள்ளது. குறைந்தபட்சம் ரூ.5 லட்சமாவது அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்.

    நாம் மட்டும் அல்ல நம்மோடு உள்ளவர்களையும் பாதுகாப்போடு பார்த்துக் கொள்ள அனைவரும் வீட்டில் இருப்போம் ஒற்றுமையோடு கொரோனாவை விரட்டுவோம்.

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

    Next Story
    ×