என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செங்கோட்டையன்
    X
    அமைச்சர் செங்கோட்டையன்

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.70 கோடி நிதி- அமைச்சர் செங்கோட்டையன்

    கொரோனா நிவாரண நிதிக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.70 கோடி நிதி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியினை வழங்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதையடுத்து பலர் முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற பண உதவிகளை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கொரோனா நிவாரண நிதிக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.70 கோடி நிதி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:- அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியமான ரூ.70 கோடி கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
    Next Story
    ×