search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    விழுப்புரத்தில் கொரோனா பரவும் அபாயம்- ஊரடங்கை மீறி வீதிகளில் பொதுமக்கள் நடமாட்டம்

    கொரோனா வைரஸ் கிருமியை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. விழுப்புரத்தில் ஊரடங்கை மீறி வீதிகளில் பொதுமக்கள் நடமாடுவதால் விழிப்புணர்வு வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    விழுப்புரம்:

    இந்தியாவில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் கிருமியை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வீதிகளில் பொதுமக்கள் கூட்டமாக வரக்கூடாது. வீடுகளில் தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ஆனால் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து விழுப்புரத்துக்கு வருவார் எண்ணிக்கையும் அதிகரித்தபடி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்துக்கு மட்டும் கடந்த 28-ந் தேதி 1,500 பேர் வெளிமாநிலத்தவர் வந்தனர். அது நேற்று 2,022 ஆக அதிகரித்து உள்ளது.

    கொரோனா தொற்று சந்தேகத்தால் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இவர்களது ரத்தமாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் தேவை இன்றி திரிவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைக்கு எதிராக அமைந்து உள்ளது.

    விழுப்புரம் நகரில் காய்கறி, மளிகை பொருட்களை வாங்குவதாக கூறி காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை வாகனங்களில் ஏராளமானோர் செல்கின்றனர்.

    அதோடு காய்கறி மார்க்கெட், மளிகை கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக கூடுகின்றனர். இதே போன்று மாவட்டத்தில் கிராமங்களில் உள்ள டீக்கடையில் 70 வயதுக்கு மேற்பட்டோர் கும்பலாக நிற்கின்றனர்.

    இது போன்று மக்கள் திரிவதால் கொரோனா வைரஸ் பரவும் அபாய நிலை விழுப்புரம் மாவட்டத்தில் நிலவுகிறது. எனவே தகுந்த விழிப்புணர்வு வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×