search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பாபநாசத்தில் கொரோனா ஊரடங்கால் குறைந்த உறவினர்களுடன் நடந்த திருமணம்

    பாபநாசத்தில் கொரோனா ஊரடங்கு தடையால் குறைந்த உறவினர்களுடன் திருமணம் நடைபெற்றது.
    பாபநாசம்:

    பாபநாசத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் காசாளராக பணிபுரிபவர் ராவணன். இவரது மனைவி ஜெயந்தி. இவர்களது மகள் கீர்த்திகா தேவி (வயது 22) இவருக்கும் அதிராம்பட்டினம் சக்திவேல் தமிழ்ச்செல்வி தம்பதியரின் மகன் என்ஜினியர் மச்சேந்திரன் என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களது திருமணம் அதிராம்பட்டினத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கடந்த 29-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக இரு வீட்டார் தரப்பிலும் 1300க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பிதழும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக அதிராம்பட்டினத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களும் இழுத்து மூடப்பட்டது.

    இதனால் மணமக்கள் வீட்டார் செய்வதறியாது திகைத்தனர். உடனே மணமகள் வீட்டார் நேற்று மதியம் திருமண வரவேற்பிற்கு புக்கிங் செய்திருந்தனர். அந்த மண்டபத்திலேயே திருமணத்தை நடத்தி கொள்ள முடிவு செய்தனர். அதன்படி திருமணம் நேற்று அதிகாலை குறைந்த உறவினர்களுடன் எளிய முறையிலும் நடைபெற்றது. மணமக்கள் முக கவசம் அணிந்து திருமணம் செய்து கொண்டனர். இதில் மணமக்கள் வீட்டார் இருதரப்பில் இருந்தும் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    திருமணத்திற்காக அதிராம்பட்டினத்தில் இருந்து பாபநாசம் நோக்கி மாப்பிள்ளை மச்சேந்திரன் அவருடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஏழு பேர் ஒரு காரில் பாபநாசம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஆனால் வரும் வழியில் அய்யம்பேட்டை போலீசார் அவர்கள் காரை தடுத்து நிறுத்தினர். அப்போது மச்சேந்திரன் சார் நான் தான் மாப்பிள்ளை. எனக்கு தான் திருமணம் என கூறி திருமண அழைப்பிதழை காட்டி கெஞ்சியுள்ளார். அதனை வாங்கி பார்த்த போலீசார் அதிராம்பட்டினத்தில் நடைபெறும் திருமணத்திற்கு ஏன் பாபநாசம் செல்கிறீர்கள் என கேட்டனர். இதுபோன்று ஒவ்வொரு இடத்திலும் விளக்கம் அளித்து எனது திருமணம் இவ்வளவு சிரமப்பட்டு நடப்பதை என் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது என மணமகன் மச்சேந்திரன் வேதனையுடன் கூறினார்.
    Next Story
    ×