search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
    X
    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

    மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க 9 குழுக்கள் - தமிழக அரசு உத்தரவு

    ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க 9 குழுக்களை அமைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி உத்திரவிட்டுள்ளார்.
    சென்னை:

    கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொண்ட 9 குழுக்களை அமைத்துள்ளார்.

    அந்த குழுக்களில் இடம் பெற்றவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு குழு:- செந்தில் குமார், அதுல்யே மிஸ்ரா, பங்கஜ்குமார், பன்சல், சந்தோஷ் மிஸ்ரா.

    அத்தியாவசிய பொருள் நகர்வுக்கான ஒருங்கிணைப்பு குழு:- முருகானந்தம், அருண் ராய், அனுஜார்ஜ், மருத்துவ அனிஜ்பேகர்.

    அத்தியாவசிய பொருட்கள் (கோப்புப்படம்)

    மாநில-மாவட்ட அளவிலான அத்தியாவசிய பொருள் வினியோகம்:- தயானந்த் கட்டாரியா, ஹகன் தீப்சிங்பேடி, தாமரைக் கண்ணன்.

    ஊடக ஒருங்கிணைப்பு குழு:- குமரகுருபரன், பொ.சங்கர், தீபக் ஜேக்கப்.

    நோய் தொற்று கண்காணித்தல், சுகாதார பணி ஒருங்கிணைப்பு குழு:- கோபால், சந்திரமோகன், நாகராஜன்.

    போக்குவரத்து ஒருங்கிணைப்பு குழு:- எஸ்.ஏ.பிரபாகர், ஜவகர், தர்மேந்திர பிரதாப் யாதவ்.

    நோய் தொற்றாளர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிதல்:- மருத்துவர் உமாநாத், ஜெகநாதன், சாம்சன்.

    சுகாதார உள்கட்ட மைப்பு:- ஹன்ராஜ் வர்மா, தர்மந்திரசிங், மணிவாசன்.

    தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து முதியோருக்கான விவாத நடவடிக்கை:- கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், விஷ்ணு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    பொது மக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் அவர்களது தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின் தொடர்ச்சியாக இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×