search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து 200 டன் குப்பைகள் அகற்றம்

    கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் ஊரடங்கை பயன்படுத்தி சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 200 டன் குப்பைகள் அகற்றப்பட்டது.
    சென்னை:

    கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மக்கள் ஊரடங்கு நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட் அடைக்கப்பட்டு இருந்தன. வியாபாரிகள், பொதுமக்கள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டன.

    காய்கறி கழிவுகள், மூலம் நோய் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் காய்கறி, பூ மார்க்கெட் போன்றவற்றை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.

    100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மார்க்கெட்டில் குவிந்த காய்கறி கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டன. மார்க்கெட்டின் அனைத்து பகுதியிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மார்க்கெட்டுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதால் வளாகத்தை தூய்மையாக வைத்து இருக்க வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் பிரசாத் உத்தரவிட்டுள்ளார். தேங்கி கிடந்த குப்பைகள், கழிவுகள் ஆகியவற்றை கமி‌ஷனர் நேரடியாக ஆய்வு செய்தார்.

    சுமார் 200 டன் குப்பைகள் காய்கறி மார்க்கெட்டில் இருந்து அகற்றப்பட்டன.

    இந்த பணி 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. கழிவுகள் லாரிகளில் ஏற்றி அந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன. இன்று மீண்டும் மார்க்கெட் திறக்கப்பட்டது. வியாபாரிகள் பொதுமக்கள் குவிந்தனர். பொது சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டிய அவசர நிலை ஏற்பட்டுள்ளது. வியாபாரிகளும், பொதுமக்களும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என கமி‌ஷனர் பிரசாத் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இந்த ஆய்வின்போது துணை கமி‌ஷனர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர்.

    Next Story
    ×