search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருவண்ணாமலையில் 62 கிலோ கஞ்சா பறிமுதல்- 34 பேர் கைது

    திருவண்ணாமலையில் கஞ்சா விற்றதாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதுதொடர்பாக 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து மொத்தம் 62 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை கஞ்சா விற்பனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் பிப்ரவரி 20-ந் தேதி வரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதில் திருவண்ணாமலை வண்டி மேட்டு தெருவைச் சேர்ந்த சுபாஷினி என்பவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி 21-ந்தேதிக்கு பிறகு தொடர் தேடுதல் வேட்டை நடத்தி கடந்த 12-ந்தேதி வரை மேலும் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 16 பேர் கைது செய்யப்பட்டனர். 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    திருவண்ணாமலை சமுத்திரம் பகுதியை சேர்ந்த கவிதா, இளையராஜா, தமிழ் ஆகிய 3 பேரும் திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த துர்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் கடந்த 12-ந்தேதி வரை திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்றதாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இது தொடர்பாக 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அவர்களிடமிருந்து மொத்தம் 62 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×