search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் சாந்தா.
    X
    கலெக்டர் சாந்தா.

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிய சித்த மருத்துவ பிரிவு- கலெக்டர் தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிய சித்த மருத்துவ பிரிவு தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட கலெக்டர் புதிய சித்த மருத்துவ பிரிவை தொடங்கி வைத்தார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிய சித்த மருத் துவ பிரிவு தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வே. சாந்தா தலைமை தாங்கி புதிய சித்த மருத்துவ பிரிவை தொடங்கி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகளை வழங்கி பேசினார். இந்த புற சிகிச்சை சித்த மருத்துவ பிரிவு வாரத்தில் 2 நாட்கள் அதாவது திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செயல்படும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட இருக்கிறது. இதில் சிறப்பு பிரிவு கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் பயனடையும் வகை யில் செயல்பட உள்ளது.

    குறிப்பாக சர்க்கரை நோய், இருதய நோய், ஆஸ்துமா நோய், மூட்டு வலிகள், தோல் நோய், சைனஸ் தொந்தரவு, பெண்களின் கருப்பை கட்டி, தைராய்டு பிரச்சினை, சினைப்பை நீர்க்கட்டி பிரச்சினை, மாதாந்திர தீட்டு பிரச்சினை, பித்தப்பை கற் கள், சிறுநீரக கற்கள் மற்றும் பல்வேறு நோய்களுக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

    எனவே இந்த சிறப்பு சித்த மருத்துவ பிரிவை கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.காமராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். தொடக்க விழாவையொட்டி வருகை தந்த அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் சூரணம் இலவசமாக வழங்கப்பட்டது.
    Next Story
    ×