search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    அதிராம்பட்டினம் பகுதியில் திடீர் மழை

    அதிராம்பட்டினம் பகுதியில் திடீரென இன்று மழை பெய்தது. இந்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    அதிராம்பட்டினம்:

    தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். உடல் சூட்டை தணிக்க பழங்கள், குளிர்பானங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் இளநீர், தர்ப்பூசணி குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு தற்போது வருகிறது.

    நேற்று வரை வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியும் சிலர் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் வெயில் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் மயங்கி கீழே விழும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் வீட்டுக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை 8.45 மணியில் இருந்து 9.50 மணி வரை மழை பெய்தது. இந்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் லேசான மழை பெய்தது.

    இந்த வருடம் பருவமழை நன்றாக பெய்தது அடுத்து தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத சூழ்நிலை நிலவியது. இதனையடுத்து அண்மைகாலமாக வெயில் மக்களை வாட்டி வைத்தது இதன் காரணமாக மக்கள் வெளியே வராத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனையடுத்து சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக மதுக்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் லேசான மழை பெய்தது. நிலவரப்படி இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது 7 மணி நிலவரப்படி தூறிக் கொண்டிருந்தது பிறகு எட்டரை மணியளவில் சுமார் 5 நிமிடம் லேசான மழை பெய்தது அதன் பிறகு லேசாக வெயில் காட்டியது, பிறகு வானம் மேகமூட்டமாக இருந்தது இப்பொழுது ஒன்பது மணி நிலவரப்படி வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    Next Story
    ×