search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    அன்பழகன் இறந்த தகவல் அறிந்து தக்கலை தி.மு.க. நிர்வாகி அதிர்ச்சியில் மரணம்

    தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் இறந்த தகவல் அறிந்து தக்கலை நிர்வாகி அதிர்ச்சியில் மரணம் அடைந்தார்.

    தக்கலை:

    தக்கலையை அடுத்த அழகியமண்டபம், பிலாங்காலை பகுதியை சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 61).

    இவர் ஆரம்ப கால திமு.க. தொண்டர். தற்போது கட்சியின் திருவட்டார் ஒன்றிய பிரதிநிதியாக இருந்தார்.

    இன்று காலை டீ குடிப்பதற்காக கடைக்கு சென்ற முருகதாஸ், அங்கு தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் இறந்த தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக வீட்டுக்கு சென்ற அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உறவினர்கள் அவரை அழகியமண்டபத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், முருகதாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    Next Story
    ×