search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட தங்க நகைகளை வாங்க இந்திய தர நிர்ணய அமைப்பு வலியுறுத்தல்

    நகை வாங்குபவர்கள் ஹால்மார்க் முத்திரை இருப்பதை பார்த்து வாங்கவேண்டும் என்று இந்திய தர நிர்ணய அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
    சென்னை:

    இந்திய தர நிர்ணய அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    அடுத்த ஆண்டு ஜனவரி 15-ந்தேதி முதல் நகைகளை ‘ஹால்மார்க்’ முத்திரையுடன் மட்டுமே விற்பனை செய்யவேண்டும். அதேபோல 14 கேரட், 18 கேரட் மற்றும் 22 கேரட் என 3 கிரேடுகளில் மட்டுமே தங்கம் விற்பனை செய்யவேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக இந்திய தர நிர்ணய அமைவனத்தில் (பி.ஐ.எஸ்.) பதிவு செய்வதற்காக நகை வியாபாரிகளுக்கு ஒரு ஆண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    எனவே நகை வாங்குபவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 15-ந்தேதிக்கு பிறகு பி.ஐ.எஸ். ஹால்மார்க் தர முத்திரை, தங்கத்தின் கேரட் அளவு, மதிப்பீடு மையத்தின் பெயர் மற்றும் நகைக்கடை முத்திரை இருக்கிறதா? என்பதை பார்த்து வாங்கவேண்டும்.

    நுகர்வோர், ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகள் மற்றும் ஆபரணங்களை வாங்கும்போது அதற்கு உண்டான ரசீதை மறக்காமல் பெற்றுக்கொள்ளவேண்டும். இந்திய தர நிர்ணய அமைவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக்கூடங்கள் பற்றிய தகவல்களை   www.bis.gov.in   என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×