search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹால்மார்க் முத்திரை"

    • சென்னையில் 45 ஹால்மார்க் தர மையங்கள் செயல்படுகின்றன.
    • குறைந்த அளவில் மையங்கள் இருப்பதால் அதிகரிக்க வேண்டும் என்று நகை வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தமிழகத்தில் ஹால்மார்க் முத்திரை நகைகள் 26 மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட உள்ளன. நாளை முதல் இது அமல்படுத்தப்பட்டாலும் மற்ற மாவட்டங்களுக்கு விரைவில் கொண்டுவர அதற்கான மையங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.

    ஹால்மார்க் தர சான்று வழங்கக்கூடிய 167 மையங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன. அந்த இடத்தில் தான் நகைகள் தரம் ஆய்வு செய்யப்பட்டு முத்திரை வழங்கப்படும். குறைந்த அளவில் மையங்கள் இருப்பதால் அதனை அதிகரிக்க வேண்டும் என்று நகை வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    சென்னையில் 45 ஹால்மார்க் தர மையங்கள் செயல்படுகின்றன. இங்குள்ள அனைத்து நகைக்கடைகளும் இவற்றில் தான் தங்கத்தின் தரத்தை உறுதி செய்து சான்றிதழ் பெற வேண்டும்.

    • நகை கடைகளில் எச் யூஐடி என்ற ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைள் விற்க கூடாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    • வருகிற ஏப்ரல் மாதம் முதல் எச் யூஐடி என்ற ஹால்மார்க் முத்திரை கொண்ட தங்க நகைகளே விற்பனை செய்ய வேண்டும்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் போலி தங்க விற்பனையை தடுக்க பிஐஎஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையடுத்து எச் யூஐடி என்ற ஹால்மார்க் முத்திரையை வெளியிட்டு உள்ளது.

    இனி நகை கடைகளில் எச் யூஐடி என்ற ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைள் விற்க கூடாது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்காக நாடு முழுவதும் தங்க விற்பனை அதிகம் நடக்கும் 339 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் வருகிற ஏப்ரல் மாதம் முதல் எச் யூஐடி என்ற ஹால்மார்க் முத்திரை கொண்ட தங்க நகைகளே விற்பனை செய்ய வேண்டும். கேரளாவில் இடுக்கி மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டங்களிலும் ஏப்ரல் முதல் ஹால்மார்க் முத்திரை கொண்ட தங்க நகைகளே விற்பனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    ×