search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினிகாந்துடன் தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை தலைவர்கள்
    X
    ரஜினிகாந்துடன் தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை தலைவர்கள்

    ரஜினிகாந்துடன் தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை தலைவர்கள் சந்திப்பு

    தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை தலைவர்கள் சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை இன்று சந்தித்து தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
    சென்னை:

    தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (NRC) நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.3000 கோடிக்கு மேல் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், இதை செயல்படுத்தப் போவதில்லை என சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

    விரைவில் தொடங்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு, இந்த தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) திட்டம் ஆதாரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த கணக்கெடுப்புகளுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

    குறிப்பாக, தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் திரளான முஸ்லிம் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபையை சேர்ந்த முன்னணி தலைவர்கள் சென்னையில் இன்று நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் தோட்டம் இல்லத்தில் சந்தித்துதேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை தலைவர் கே.எம்.பாகவி

    இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஜமாத்துல் உலமா சபை தலைவர் கே.எம்.பாகவி, ‘தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து ரஜினிகாந்திடம் விவாதித்தோம். இதனால் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் பற்றி அவரிடம் விளக்கினோம்.

    எங்களது நோக்கத்தை அவர் புரிந்துக் கொண்டதுடன் முஸ்லிம் மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் தன்னால் இயன்றதை செய்வதாகவும் ரஜினிகாந்த் உறுதி அளித்தார்’ என குறிப்பிட்டார்.
    Next Story
    ×