என் மலர்

  செய்திகள்

  சுதீஷ்
  X
  சுதீஷ்

  முதல்வர் பழனிசாமியுடன் தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் சந்திப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாநிலங்களவை இடம் வழங்குவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் சந்தித்துள்ளார்.
  சென்னை:

  மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து புதிதாக 3 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான பணிகளில் அக்கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மாநிலங்களவை எம்.பி. ஆவதற்கு அ.தி.மு.க.வில் உள்ள முன்னணி நிர்வாகிகள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது.
  முதல்வர் பழனிசாமி
  அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் நேரில் சந்தித்து பேசினார். மாநிலங்களவை இடம் வழங்குவது தொடர்பாக முதல்வரிடம் சுதீஷ் பேசியதாக தெரிகிறது.
  Next Story
  ×