search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    பென்னாகரத்தில் திருமணமான புதுப்பெண் மாயம்

    பென்னாகரத்தில் திருமணமான புதுப்பெண் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் ஆசிப். இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகி அம்ரின் (வயது 19) என்ற மனைவி உள்ளார். 

    இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி அம்ரின் குளிப்பதற்கு சோப்பு வாங்கி வருகிறேன் என்றுகூறி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் வீட்டிலிருந்து வெளியே சென்ற அம்ரின் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. 

    இதுகுறித்து ஆசிப் பல இடங்களில் தேடிபார்த்தும் அம்ரின் கிடைக்கவில்லை. எனவே ஆசிப் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் எனது மனைவியை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் புகார் செய்தார். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×