search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் இன்று நடைபெற்ற திருப்பலியின் சாம்பலால் சிலுவை குறியீடு இடப்பட்டது.
    X
    தூய இருதய ஆண்டவர் பசிலிக்காவில் இன்று நடைபெற்ற திருப்பலியின் சாம்பலால் சிலுவை குறியீடு இடப்பட்டது.

    கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது- சாம்பல் புதன் பிரார்த்தனை

    கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கமான சாம்பல் புதன் இன்று தொடங்கியது.

    புதுச்சேரி:

    கிறிஸ்தவர்களின் உயிர்ப்பு தினத்திற்கு முந்தைய 40 நாட்கள் விரதம் இருப்பதை தவக்காலமாக அனுசரிக்கின்றனர்.

    இந்த தவக்கால தொடக்கமான சாம்பல் புதன் சிறப்பு பிராத்தனை ரெயில் நிலையம் எதிரில் உள்ள இருதய ஆண்டவர் பசலிக்கா தேவாலயத்தில் நடைபெற்றது. இதில் அருள்தந்தை இறையுரையாற்றிய பின்னர் வழிபாட்டில் கலந்து கொண்ட கிறிஸ்தவ மக்களுக்கு சாம்பலால் சிலுவை வரைந்து அவர்களை தவக்காலத்துக்கு ஆயத்தப்படுத்தி ஆசீர்வாதம் செய்தார்.

    சாம்பல் புதனை தொடர்ந்து வரும் நாட்களில் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    குறிப்பாக வெள்ளி தோறும் ஆலயங்களில் சிலுவை பாதை வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இந்த நாட்களில் ஆடம்பரம் நிகழ்வுகளை தவிர்த்து ஜெபம், தவம், தர்மம் போன்ற செயல்களை கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    ஏசு உயிர்த்தெழும் நாளான ஏப்ரல் 12-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    Next Story
    ×