search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thavakalam"

    • உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டா் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்களை தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனா்.
    • தூய சவேரியாா் பேராலயத்தில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் மறைமாவட்ட பேராயா் அந்தோணிசாமி பங்கேற்று மறையுரை ஆற்றினாா்.

    நெல்லை:

    ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட புனித நாட்களை நினைவு கூறும் வகையில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஈஸ்டா் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்களை தவக்காலமாக கடைப்பிடிக்கின்றனா். இந்த காலத்தில் சிறப்பு வழிபாடு நடத்துவார்கள்.

    சாம்பல் புதன்

    அதன் தொடக்கமாக இன்று சாம்பல்புதன் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட குருத்தோலைகளைத் தீயிட்டு எரித்து சாம்பலாக்கி, பிராா்த்தனையின் முடிவில் பங்குத்தந்தையா்கள், பங்கு மக்களுக்கு நெற்றியில் பூசிவிட்டனா்.

    பாளைய ங்கோட்டையில் உள்ள மிகவும் பழமையான தேவாலயமான தூய சவேரியாா் பேராலயத்தில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் மறைமாவட்ட பேராயா் அந்தோணிசாமி பங்கேற்று மறையுரை ஆற்றினாா்.

    தொடர்ந்து அங்கிருந்த வர்களுக்கு கடந்த ஆண்டு குருத்தோலை ஞ்ாயிறு அன்று எரிக்கப்பட்ட குருத்தோலை சாம்பலை நெற்றியில் பூசி சாம்பல் புதன் தவக்காலத்தை தொடங்கி வைத்தார்.

    பாளை- சீவலப்பேரி சாலையில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயம், டக்கரம்மாள்புரத்தில் உள்ள தூய மீட்பரின் ஆலயம், சாந்திநகரில் உள்ள குழந்தையேசு தேவாலயம், உடையாா்பட்டியில் உள்ள இயேசு கிறிஸ்துவின் திரு இருதய ஆலயம், நெல்லை அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி. நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டையில் உள்ள அந்தோணியாா் தேவாலயம் ஆகியவற்றில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றன.

    தென்னிந்திய திருச்சபை சாா்பில் முருகன்குறிச்சியில் உள்ள தூய திரித்துவ பேராலயத்தில் தவக்கால தொடக்க ஆராதனை இன்று காலையில் நடைபெற்றது. சேவியா்காலனியில் உள்ள தூய பேதுரு ஆலயம், மேலப்பாளையத்தில் உள்ள தூய அந்திரேயா ஆலயம், டக்கரம்மாள்புரத்தில் உள்ள மீட்பரின்ஆலயம் உள்பட அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. கிறிஸ்தவா்கள் தவக்காலத்தில் அசைவ உணவுகளைத் தவிா்த்து, இயேசு சிலுவையில் அறைந்த போது மனிதா்களுக்காக பட்டபாடுகளை நினைவு கூறுவா். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் சிலுவைப்பாதை குறித்த சிறப்புப் பிராா்த்தனை தேவால யங்களில் நடைபெறும்.

    ஈஸ்டர் பண்டிகை

    மேலும், பெண்கள் இந்த நாள்களில் வீடுவீடாகச் சென்று சிறப்பு ஜெபம் செய்வாா்கள். ஏப்ரல் 2-ந் தேதி குருத்தோலை ஞாயிறு பவனியும், 6-ந்தேதி பெரிய வியாழனையொட்டி பாதம் கழுவும் சடங்கும், 7-ந் தேதி பெரியவெள்ளி சிறப்பு பிராா்த்தனை ஆகியவை நடைபெறும். 9-ந் தேதி ஈஸ்டா் பண்டிகை கொண்டாடப்படும்.

    ×