என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  போத்தனூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருடிய வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போத்தனூர் அருகே இன்று அதிகாலை கோவில் உண்டியலை உடைத்து திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கோவை:

  கோவை, போத்தனூர் அருகே உள்ள அண்ணாபுரத்தில் அக்னி மாரியம்மன் கோவில் உள்ளது.

  இன்று அதிகாலை 4 மணியளவில் கோவிலின் காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து உள்ளே நுழைந்த ஒரு வாலிபர் உண்டியலை உடைத்து அதில் உள்ள பணத்தை திருடினார். பின்னர் காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து தப்பி செல்ல முயன்றார்.

  இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உண்டியலை உடைத்து திருடி தப்பிச் செல்ல முயன்ற வாலிபரை மடக்கி பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

  பின்னர் போத்தனூர் போலீசில் வாலிபர் மற்றும் அவர் வந்த மொபட்டை ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் அரசமர பஸ் நிறுத்தம் பகுதியை சேர்ந்த ஆசாத் (வயது 19) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×