search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    நோ பார்க்கிங்கில் மோட்டார் சைக்கிள் நிறுத்தியிருந்த 12 பேர் மீது வழக்கு

    தஞ்சை ரெயில் நிலையம் முன்பு நோ பார்க்கிங்கில் மோட்டார் சைக்கிள் நிறுத்தியிருந்த 12 பேர் மீது பாதுகாப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை ரெயில் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் பெரும்பாலானோர் ரெயில் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வருகின்றனர். ஆனால் சிலர் மோட்டார் சைக்கிளை தடை செய்யப்பட்ட பகுதியில் ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர். இதனால் ரெயில் நிலையம் முன்பு கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனை தடுக்க தஞ்சை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் நிலையம் முன்பு 2 புறங்களிலும் பேரிகார்டுகள் வைத்துள்ளனர். மேலும் நோ பார்க்கிங் என்ற அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் விதி முறைகளை மீறி சிலர் நோ பார்க்கிங் இடத்திலும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி செல்வதாக பாது காப்பு படை போலீ சாருக்கு புகார்கள் வந்தன.

    அதன்பேரில் இன்ஸ் பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் சப்-இன்ஸ் பெக்டர்கள் வெங்கடாச் சலம், மனோகரன் மற்றும் போலீசார் ரெயில் நிலையம் முன்பு நோ பார்க்கிங் இடத்தில் நிறுத் தப்பட்டிருந்த 12 மோட் டார் சைக்கிள்களை சங்கிலி போட்டு கட்டினர். பின்னர் அந்த மோட்டார் சைக்கிள்களை லாரியில் ஏற்றிக்கொண்டு போலீஸ் நிலையத்தில் இறக்கினர். இதைத்தொடர்ந்து அந்த மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களான திருச்சி கல்லுக்குழியை சேர்ந்த பெரியசாமி (வயது 25 ) உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு கடும் எச்சரிக்கைக்கு பின்னர் மோட்டார் சைக்கிள் ஒப் படைக் கப்பட்டது. தொடர்ந்து இதுபோல் நோ பார்க் கிங் இடத்தில் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கபட்டனர்.

    தொடர்ந்து பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×