search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோழிப் பண்ணை
    X
    கோழிப் பண்ணை

    கொரோனா வைரஸ் பீதி- முட்டை, கறிக்கோழி விலை வீழ்ச்சி

    கொரோனா வைரஸ் பீதி காரணமாக முட்டை, கறிக்கோழிகளின் விற்பனை, விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமான கோழிப் பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் ஏராளமான கறிக்கோழிகளும், முட்டையும் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இதனால் நாமக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களுக்கும் கறிக்கோழி வளர்ப்பு தொழில் வாழ்வாதாரமாக உள்ளது.

    இந்த நிலையில் கோழிப்பண்ணைகளில் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளதாகவும், இதனால் கறிக்கோழிகளை மக்கள் சாப்பிட வேண்டாம் என்றும், வாட்ஸ்-அப் குரூப்களில் வதந்திகள் பரப்பப்பட்டு வந்தது.

    இதனால் கறிக்கோழி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இதைத்தொடர்ந்து கறிக்கோழி விற்பனையும் குறைந்தது.

    நாமக்கல்லில் உயிருடன் உள்ள கோழி கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.80 வரை விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டது. நேற்று இந்த விலை ரூ.58 ஆக குறைந்தது.

    கடைகளில் ஒரு கிலோ கோழி கறி கடந்த வாரம் ரூ. 120 முதல் ரூ. 140 வரை விற்றது. இன்று ரூ. 100 முதல் ரூ. 120 வரை விற்பனை ஆகிறது.

    கடந்த வாரம் ஒரு முட்டை 4 ரூபாய் 75 காசு வரை விற்கப்பட்டது. நேற்று முன்தினம் முட்டையின் விலை 4 ரூபாய் 5 காசாக இருந்தது. நேற்று ஒரே நாளில் முட்டையின் விலை 30 காசு குறைக்கப்பட்டது.

    நேற்று நாமக்கல்லில் நடந்த கோழிப்பண்ணையாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் கூட்டத்தில் முட்டை விலை 3 ரூபாய் 45 காசு என்று நிர்ணயிக்கப்பட்டது. ஒரு வாரத்தில் மட்டுமே முட்டையின் விலை ஒரு ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    முட்டை விலை குறைப்பு குறித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நாமக்கல் மண்டல தலைவர் செல்வராஜ் கூறியதாவது:-

    முட்டை விலை சரிவை பற்றி கவலைப்பட வேண்டாம், இன்னும் ஓரிரு நாட்களில் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது போல் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து முட்டைக்கான சரியான விலையை நிர்ணயம் செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×