என் மலர்

  செய்திகள்

  கஞ்சா கடத்தல்
  X
  கஞ்சா கடத்தல்

  சென்னைக்கு ரெயில் மூலம் கஞ்சா கடத்தல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னைக்கு ரெயில் மூலம் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  போரூர்:

  அசோக் நகர் 7-வது அவின்யூ பாலகிருஷ்ணா தெருவில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், போலீஸ்காரர் பார்த்திபன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக கையில் பையுடன் வந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் பையை சாலையில் போட்டுவிட்டு ஓடிவிட்டான். சிறிது நேரம் கழித்து பையை எடுக்க வந்த வாலிபரை மறைந்து இருந்த போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

  பையில் 2½ கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா இலைகள் இருந்தது. விசாரணையில் அவன் நேபாள நாட்டைச் சேர்ந்த டேக்பகதூர் என்பதும் மேற்கு சைதாப்பேட்டை ராமராஜ் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்துவருவதும் இவர் சொந்த ஊரான நேபாளத்தில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்ததாக தெரிவித்து உள்ளார். டேக் பகதூர் யாருக்கு கஞ்சா கொண்டு செல்கிறார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

  Next Story
  ×