என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  சுத்தமல்லி அருகே ஆற்றில் மணல் திருடிய 3 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுத்தமல்லி அருகே ஆற்றில் மணல் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  நெல்லை:

  சுத்தமல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதாக அவருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நடுக்கல்லூரை அடுத்த கோடகநல்லூர் தாமிரபரணி ஆற்று பகுதிக்கு சென்றனர்.

  அப்போது அங்கு கோடகநல்லூரை சேர்ந்த பொன்னப்பன்(வயது 64), நாகராஜ்(40), ராஜீவ் காந்தி(44) மற்றும் நங்கையர் ஆகியோர் 2 மோட்டார் சைக்கிளில் 8 சாக்குகளில் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை பிடிக்க துரத்தினர். இதில் நங்கையர் மட்டும் தப்பியோடினார். மற்ற 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மணல் அள்ள பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  Next Story
  ×