search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காணொலிக் காட்சி மூலமாக மேம்பாலங்களை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
    X
    காணொலிக் காட்சி மூலமாக மேம்பாலங்களை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

    காணொலிக் காட்சி மூலம் மேம்பாலங்களை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

    காணொலிக் காட்சி மூலம் மேம்பாலங்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

    சென்னை:

    வண்டலூரில் 91 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை வெளிவட்டச் சாலையுடன் இணைக்கும் வகையில் ரெயில்வே மேம்பாலத்துடன் கூடிய ஒரு ஏறு தளம், 2 இறங்கு தளங்களுடன் கூடிய மேம்பாலம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    இந்த வண்டலூர்- மண்ணிவாக்கம் வரையிலான 2.65 கிலோ மீட்டர் நீள பிரதான சாலையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலமாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

    மேலும், நாமக்கல், திருப்பூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம் கோயம்புத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 119 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒரு இரண்டாம் அடுக்கு மேம்பாலம் மற்றும் 15 ஆற்றுப் பாலங்களையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    பூவிருந்தவல்லி வட்டம், மேல்பாக்கம் கண்ணப்பாளையம் சாலையில் ஆவடியை இணைக்கும் கூவம் ஆற்றின் குறுக்கே கண்ணப்பாளையத்தில் 6 கோடியே 60லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் பொன்னேரி வட்டம், சென்னை புலிகாட் சாலையில் பிரிந்து செல்லும் புதுவாயல் புலிகாட் சாலையில் ஆரணி ஆற்றின் குறுக்கே பொன்னேரியில் 12 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம்வட்டம், கோனேரி ராஜபுரம் கிராமச் சாலையில் செ.புதூர் கிராமத்தில் 2கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம் 211 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    மேலும், சென்னை மாநகர சாலைகள் கோட்டத்திற்கு 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான சாலைகளை துப்புரவு செய்யும் 6 இயந்திர வாகனங்கள், சாலைகளில் ஏற்படும் குழிகளை சரி செய்யும் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஒரு இயந்திர வாகனம் மற்றும் சிறிய உருளை இயந்திரம்; மழை நீர் வடிகால் மற்றும் சிறுபாலங்களில் தேங்கியுள்ள கசடுகளை உறிஞ்சிட 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான ஒரு இயந்திர வாகனம் மற்றும் மண் அகற்றும் சிறிய இயந்திரம் ஆகியவற்றை நெடுஞ்சாலைத் துறையின் சாலை பராமரிப்பு பயன்பாட்டிற்காக வழங்கிடும் அடையாளமாக, 3 அலுவலர்களுக்கு வாகனங்களுக்கான சாவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் கோவை, தொண்டா முத்தூரில் 1 கோடியே 18 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

    சென்னை, கோயம்புத்தூர், நாமக்கல், சேலம், ஈரோடு, விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, நாகப்பட்டினம், திருச்சி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 15 கோடியே 89 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 13 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் மற்றும் சென்னை, மெரினா கடற்கரை மீட்புப் பணிகள் நிலையத்தையும் அவர் திறந்து வைத்தார்.

    எரிசக்தித் துறையின் சார்பில் தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் 12 கோடியே 23 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/11 கி.வோ. துணை மின் நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    மேலும், தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் 1,023 கோடியே 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 91 துணை மின் நிலையங்களையும் அவர் திறந்து வைத்தார்.

    மேலும் பல்வேறு கட்டி டங்களையும் அவர் திறந்து வைத்தார்.

    Next Story
    ×