என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  திருப்பத்தூர் அருகே கல்லூரி பேராசிரியை தூக்கிட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பத்தூர் அருகே மாப்பிள்ளை பார்த்து விட்டு சென்ற நிலையில் கல்லூரி பேராசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  திருப்பத்தூர்:

  திருப்பத்தூர் கந்திலி அடுத்த சாந்தகுப்பத்தை சேர்ந்தவர் அர்ஜுனன். இவரது மகள் சுனந்தா (வயது 28) நத்தம் கூட்டு ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

  இவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து மாப்பிள்ளை வந்து இவரை பார்த்து விட்டு சென்றார். உடனடியாக மாப்பிள்ளை பிடித்துள்ளதா? என்று சுனந்தாவின் பெற்றோர் கேட்டுள்ளார்கள். அதற்கு எந்தவித பதிலும் கூறாமல் மவுனமாக யாரிடமும் வீட்டில் பேசாமல் இருந்துள்ளார். அவரது தாயார் வீட்டில் இருந்து ஆடு மேய்க்க சென்றுள்ளார்.

  அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் புடவையால் தூக்கிட்டு தொங்கினார்.

  வீட்டிற்கு வந்து பார்த்த அவரது தந்தை சுனந்தாவை மீட்டு கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×