என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  பொள்ளாச்சி அருகே வேன் மரத்தில் மோதி 15 பேர் படுகாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொள்ளாச்சி அருகே வேன் மரத்தில் மோதிய விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  கோவை:

  பொள்ளாச்சி சேத்துமடை பகுதியை சேர்ந்த சுப்புராஜ் நேற்று இறந்தார். அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள தருமாத்தூரணியை சேர்ந்த 15 பேர் வேனில் சேத்துமடை வந்தனர்.

  வேனை சங்கரன் கோவிலை சேர்ந்த டிரைவர் மகேஷ் ஓட்டி வந்தார். சேத்துமடை கோழிப்பண்ணை அருகில் வேன் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது வேகமாக மோதியது.

  இதில் டிரைவர் மகேஷ், வேனில் பயணம் செய்த இருளப்பன்(74), ராஜன் ( 55) உள்பட 15 பேரும் காயம் அடைந்தனர். வேன் மோதிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேன் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×