search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையம்
    X
    சென்னை விமான நிலையம்

    சீனாவில் ‘கொரோனா’ வைரஸ் நோய் - சென்னை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை

    சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக சென்னை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    சென்னை:

    சீனாவில் பரவும் மர்ம வைரஸ் காரணமாக சென்னை விமான நிலையத்தில், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனையை மத்திய சுகாதாரத்துறை நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடங்கியது.

    சீனாவில் உயிர்க்கொல்லி நோயான கொரோனா என்ற மர்ம வைரஸ் வேகமாக பரவி வருவதால் உலக நாடுகளிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சீனாவில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகள் அனைவரையும் விமான நிலையத்திலேயே மருத்துவ பரிசோதணை செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

    சென்னை விமான நிலையத்திற்கு ஹாங்காங்கில் இருந்து ‘கேத்தே பசிபிக்’ என்ற நிறுவனம் ஒரேஒரு விமான சேவையை மட்டுமே நடத்துகிறது. தினமும் நள்ளிரவு 12.30 மணிக்கு சென்னை வந்துவிட்டு, மீண்டும் அதிகாலை 2 மணிக்கு ஹாங்காங் புறப்பட்டு செல்லும். அந்த விமானத்தில் வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதணை நடத்த சென்னை விமானநிலையத்தில் உள்ள மத்திய சுகாதாரத்துறையினர் முடிவு செய்தனர்.

    அதன்பேரில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியில்,பயணிகள் விமானத்தை விட்டு இறங்கி, குடியுரிமை சோதணைக்கு செல்வதற்கு முன்னதாக உள்ள இடத்தில் 3 சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஒரு மருத்துவர் தலைமையில் 6 மருத்துவ உதவியாளர்கள் பணியில் உள்ளனர்.

    ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு 12.25 மணிக்கு வந்த 368 பயணிகளுக்கு மருத்துவ பரிசோதணை செய்தனர்.

    ஒவ்வொரு கவுண்டரிலும் ஒரு கருவி பொருத்தப்பட்டு, பயணிகள் ஒவ்வொருவராக அந்த கருவி முன்பு வாய் மூலம் ஊத அறிவுறுத்தப்பட்டனர். அந்த கருவிவுடன் இணைக்கப்பட்ட கம்ப்யூட்டரில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வு செய்து தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது.

    பயணிகள் அனைவரும் நார்மல் என்று தெரியவந்ததை அடுத்து பயணிகள் குடியுரிமை சோதணைக்கு அனுப்பப்பட்டனர்.மர்ம வைரஸ் யாருக்காவது இருக்குமானால் அதே விமானத்தில் அவர்களை திருப்பி அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

    நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவ பரிசோதணை டெல்லியில் உள்ள மத்திய சுகாதாரத்துறையிடமிருந்து மறுஉத்தரவு வரும்வரை தொடரும் என்று கூறப்படுகிறது.
    Next Story
    ×