search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை

    தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு இடங்களில் இதமான மழை பெய்துள்ளது. இன்று காலை முதல் தஞ்சை மாவட்டத்தில் வானம் கருமேகத்துடன் காணப்பட்டது.
    வல்லம்:

    தஞ்சையை அடுத்த வல்லத்தில் இன்று காலை பலத்த மழை பெய்தது. மார்கழி மாதம் முடிந்து தை மாதம் ஆரம்பம் ஆகி உள்ள நிலையிலும் தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பணி பொழிவு அதிகமாகவே காணப்படுகின்றது. காலை 8 மணிக்கு மேல் வரை பனிப்பொழிவு காணப்படுகிறது.

    பனிப்பொழிவால் சாலைகளில் வாகனங்களில் செல்பவர்கள் முகப்பு விளக்கை எரிய விட்டவாறே செல்கின்றனர். வல்லத்தில் நேற்றிரவு பனிப்பொழிவு அதிகமாகவே காணப்பட்டது. தஞ்சை-திருச்சி சாலையில் சென்று பஸ் மற்ற வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்கை எரிய விட்டவாறே சென்றது.

    இந்த நிலையில் இன்று காலை வல்லத்தில் திடீரென சாரல் மழை பொழிந்தது. பனிப்பொழிவின் காரணமாக ஏற்பட்ட குளிர்ச்சி விலகாத நிலையில் சாரல் மழையும் பொழிந்து பரவசமாக காணப்பட்டது.

    வாகனங்கள் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்கள் பலத்த மழையில் நனைந்து சென்றனர்.

    வல்லத்தில் சீதோஷ்ண நிலையும் ஊட்டி, கொடைக்கானலை போன்று காணப்பட்டது. இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் நேற்று நள்ளிரவு 1 மணி முதல் இன்று காலை வரை மழை பெய்தது. இதனால் தற்போது வெயில் அடிப்பதை யொட்டி உப்பு உற்பத்தி மராமத்து பணியை தொழிலாளர்கள் தொடங்கி நிலையில் இந்த மழை சற்று பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் சம்பா நெல் அறுவடை நிலையில் உள்ள வயல்களில் இந்த மழை சற்று பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர். வேதாரண்யத்தில் இன்று காலை வரை 20.6 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×