search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    புள்ளம்பாடி பேரூராட்சி அலுவலகம் முன்பு அரசு பணியாளர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்

    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பேரூராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
    டால்மியாபுரம்:

    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பேரூராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு புள்ளம்பாடி வட்டார அரசு பணியாளர்கள் சங்க தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார்.

    போராட்டத்திற்கு டாஸ்மாக் சங்க மாநில துணை தலைவர் முருகானந்தம், தமிழ்நாடு பேரூராட்சி செயல்திறன் வாய்ந்த பணியாளர்கள் சங்க மாநில இணை செயலாளர் பொன்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க மாநில பொருளாளர் சாகுல்அமீது கலந்து கொண்டு கண்டன உரையாற்றி தொடங்கி வைத்து பேசினார்.

    தொடர்ந்து பல்வேறு பேரூராட்களில் இருந்து வந்த அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர். போராட்டத்தில் 8-வது ஊதியகுக்ழு நிலுவை தொகையை 2016 முதல் வழங்கிடவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்ததிடவும், ஊராட்சி களப்பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியாளர்கள், டாஸ்மாக், அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள், காவல் துறை, ஆதி திராவிடர், பிற்படுத்தப்பட்டோர் துறைகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட நிரந்தர ஊதிய விகிதம் இல்லாத பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் சங்க கொடியேந்தி கண்டன கோ‌ஷ மிட்டனர்.

    போராட்டத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த 200 அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லக்குடி துப்புரவு பணி மேற்பார்வையாளர் சொக்கர் வரவேற்று பேசினார். முடிவில் பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்செல்வன் நன்றி கூறினார். போராட்டத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு பேரூராட்சி சுகாதார பரப்புரையாளர்கள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ஆனந்தி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×