search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக-திமுக
    X
    அதிமுக-திமுக

    மறைமுக தேர்தல் வெற்றி நிலவரம்- 14 மாவட்ட ஊராட்சிகளை பிடித்தது அதிமுக

    தமிழகத்தில் இன்று மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மதிய நிலவரப்படி அதிமுக அதிக இடங்களை பிடித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள், ஒன்றிய துணைத்தலைவர்கள் மற்றும் ஊராட்சி துணைத்தலைவர்கள் ஆகியோரை தேர்ந்து எடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது.

    மதிய நிலவரப்படி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியிடங்களில் அதிமுக 14 இடங்களிலும்,  திமுக 12 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.  இதேபோல் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 136 இடங்களிலும், 119 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது.

    * தேனி மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவை சேர்ந்த ப்ரீத்தா தேர்வு செய்யப்பட்டார்.

    * தஞ்சாவூர் ​மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த உஷா தேர்வு செய்யப்பட்டார்.

    * கரூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக எம்.எஸ்.கண்ணதாசன் (அதிமுக) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    * தஞ்சாவூர் ​மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த உஷா தேர்வு.

    * தூத்துக்குடி  மாவட்ட புதூரொன்றிய தலைவராக அதிமுக சுசீலா தேர்வு

    * திருச்செந்தூர் ஒன்றிய தலைவராக அதிமுக செல்வி தேர்வு

    * குன்னூர் ஒன்றிய தலைவராக  திமுகவின் சுமிதா துணைத்தலைவராக நாகேஸ்வரி தேர்வு  

    * விருதுநகர் மாவட்ட ஊராட்சி தலைவராக அதிமுகவின் வசந்தி மான்ராஜ் வெற்றி பெற்றார்.

    * திருச்சி: மணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய தலைவராக திமுக வெற்றி

    * திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஒன்றிய தலைவர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளர் தினேஷ்குமார் போட்டியின்றி தேர்வு

    *  கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஒன்றியத் தலைவர்  பதவிக்கு போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் அனுஷியா தேவி வெற்றி

    * நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவின் பான்தோஸ் தேர்வு செய்யபட்டார். தமிழகத்தில் முதன்முறையாக தோடர் பழங்குடியினர் சமுதாயத்திலிருந்து தலைவராக பதவி ஏற்றார். மொத்தம் உள்ள 6 உறுப்பினர்களில் 5 பேர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    * புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் மறைமுக தேர்தல் மையத்தில் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கலைந்து செல்ல மறுத்து வாக்குவாதம் செய்ததால்  போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    * திருவள்ளூர்  மாவட்ட புழல் ஒன்றிய தலைவராக திமுகவின் தங்கமணி தேர்வு

    * புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றிய தலைவராக அதிமுகவின் ராமு போட்டியின்றி தேர்வு.

    * சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

    * சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் 16 இடங்களில் ஒன்றியக்குழு தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றுகிறது. மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பதவியும் அதிமுகவின் வசமாகிறது.

    * சேலம் மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சிக்கான 29 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில், அதிமுக 18 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

    மொத்தம் 28 வார்டுகளில் போட்டியிட்ட திமுக 5 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணியில் ஒரு வார்டில் போட்டியிட்ட காங்கிரஸ் அதில் வெற்றி பெறவில்லை.

    மாவட்ட ஊராட்சி வார்டு தேர்தலில், 18 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ள அதிமுக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இன்றியே மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றுகிறது.

    திருவாரூரில் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது. ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுகவுக்கு 5 இடம், திமுகவுக்கு 5 இடம் கிடைத்தது.

    Next Story
    ×