search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறைமுக தேர்தல்"

    • மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது
    • 5-வது முறையாக நடந்தது

    கரூர்:

    கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தல் 5-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

    கரூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த கண்ணதாசன் உள்ளார். துணை தலைவராக 8-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் தானேஷ் (எ) முத்துக் குமார் இருந்தார். அவர் பதவியை ராஜினாமா செய்தார்,

    இந்த இடைத்தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த கண்ணையன் வெற்றி பெற்றார். இதனால் 12 வார்டு கொண்ட மாவட்ட பஞ்சாயத்தில் தி.மு.க.வின் பலம் 4 ஆக உயர்ந்தது. பின்னர் அ.தி.மு.க. 2 கவுன்சிலர்கள் தங்கள் கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர். இதனால் தி.மு.க., அ.தி.மு.க. தலா 6 கவுன்சிலர்கள் வீதம் சமபலம் பெற்றது.

    இதைத் தொடர்ந்து துணைத் தலைவர் பதவிக்கு 22.10.2021 அன்று தேர்தல் அறிவிக்கப்பட்டது. பின்னர் அதை தேர்தல் அலுவலர் ஒத்தி வைத்தார். அதன்பின்னர் 3 முறை துணைத்தலைவர் தேர்தல்அறிவிப்பு வெளியானது. ஆனால் போதுமான கவுன்சிலர்கள் வராததால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில் 5-வது முறையாக ஏற்கனவே அறிவித்தபடி தேர்தல் அலுவலர் பிரபு சங்கர் தலைமையில் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது.

    தேர்தல் தொடங்குவதற்கு 10 நிமிடம் முன் ( 2.20 மணிக்கு) மறைமுக தேர்தல் நடவடிக்கைகள் கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டரின் கடிதம் அடிப் படையில் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது என்ற அறிக்கை அறையின் வாசலில் ஒட்டப்பட்டது.

    இது குறித்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர் கூறியதாவது, இந்த இடைவெளியில் ஒரு கவுன்சிலர் யாவது தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என்ற நினைக்கின்றனர். இந்த நிலை நீடித்தால் எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமிடம் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம். தேர்தலை ஒத்தி வைக்க காவல்துறை துணை போகிறது. அ.தி.மு.க. கவுன்சிலர் மீதும் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார். யாரும் கட்சி மாற மாட்டார்கள். நியாயமாக தேர்தல் நடத்துங்கள் யார் வெற்றி பெற்றாலும் ஏற்கிறோம். தேர்தலை நடத்தாமல் தள்ளி வைப்பது எவ்வகையில் நியாயம் இவ்வாறு அவர் கூறினார்

    ×