search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்கு எண்ணிக்கை
    X
    வாக்கு எண்ணிக்கை

    ஊரக உள்ளாட்சித் தேர்தல் - இரவு 7 மணி நிலவரம்

    தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்த இரவு 7 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.
    சென்னை

    தமிழகத்தில் இரு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    தொடக்கத்தில் இருந்தே அ.தி.மு.கவும், தி.மு.க.வும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன. 

    இந்நிலையில், இரவு 7 மணி நிலவரப்படி வெளியான நிலவரம் வருமாறு:

    மொத்தமுள்ள 515 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 243 இடங்களிலும், திமுக 267 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மற்றவை இரு இடத்தில் முன்னிலை வகிக்கிறது.

    இதேபோல், மொத்தமுள்ள 5,067 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 2,182 இடங்களிலும், திமுக 2,346 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மற்றவர்கள் 558 இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர். 
    Next Story
    ×