search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
    X
    சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

    வேடபட்டியில் இன்று நடக்க இருந்த சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

    கோவை வேடபட்டி அருகே இன்று நடக்க இருந்த 14 வயது சிறுமி திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

    வடவள்ளி:

    கோவை வேடபட்டி அருகே 14 வயது சிறுமிக்கு இன்று திருமணம் நடக்க இருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது.

    வடவள்ளி போலீசார் மற்றும் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஒன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி பிரியங்கா மற்றும் தேன்மொழி, சைல்டு லைன் அமைப்பினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில், 14 வயது சிறுமிக்கும், கேரளா மாநிலம், கண்ணூரைச் சேர்ந்த 21 வயது வாலிபருக்கும் நேற்று நிச்சயதார்த்தமும், இன்று திருமணமும் நடக்க இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து இருவரின் பெற்றோர்களிடமும் சிறுமிக்கு 18 வயது நிறைவடையாமல் திருமணம் செய்து வைக்க கூடாது என்று அறிவுரை வழங்கி உறுதிமொழி கடிதம் எழுதி வாங்கினர்.

    இதை மீறி சிறுமிக்கு, திருமணம் செய்தால் பெற்றோர்களை கைது செய்வோம் என்று அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    இதனையடுத்து திருமணத்துக்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் திரும்பிச் சென்றனர்.

    Next Story
    ×