
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வுடன் இணைப்பு என்று நாங்கள் அதிகாரப்பூர்வமாக சொல்லி 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இணைப்பு நடைபெறவில்லை. எங்கள் பேரவையில் இருந்து ஒரு சில குறிப்பிட்ட நபர்களை மட்டுமே அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். மற்றவர்களை இணைத்துக் கொள்ளவில்லை.
எனது கட்சியை நான் சிறப்பாக நடத்தி வந்தேன். அதை திசை திருப்பும் வகையில் எங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொள்கிறோம் என்று சொல்வதும், பின்னர் பின்வாங்குவதுமாக இருக்கின்றனர். நீண்டகாலமாக அ.தி.மு.க.வுடன் தொடர் போராட்டம் நடத்தி அவர்களுடன் இணைத்துக் கொள்கிறோம் என்று சொன்ன பிறகும் கூட எந்த பதிலும் இதுவரை வரவில்லை.

ஜெ.தீபா பேரவையை கலைக்க வைத்து நம்பிகை துரோகம் செய்துவிட்டனர். மீண்டும் அ.தி.மு.க.வுடன் இணைப்பு என்ற முயற்சி இனி என்னால் எடுக்கப்படாது. அடுத்தக்கட்ட நிலைப்பாட்டை எனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.