search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வத்தலக்குண்டு - கொடைக்கானல் பிரதான சாலையில் உருவாகியுள்ள புதிய அருவிகள்
    X
    வத்தலக்குண்டு - கொடைக்கானல் பிரதான சாலையில் உருவாகியுள்ள புதிய அருவிகள்

    கொடைக்கானலில் உருவாகிய புதிய நீர் வீழ்ச்சிகள்

    கொடைக்கானலில் உருவாகியுள்ள புதிய நீர் வீழ்ச்சிகள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடும் பனி மூட்டத்துடன் சாரல் மழை தொடர்வதால் அப்பகுதியில் உள்ள அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வெள்ளி நீர் வீழ்ச்சி பாம்பார்புரம், பியர்சோழா, அப்சர்வேட்டரி தேவதை அருவி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வெள்ளியை உருக்கியது போல் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வறண்டு கிடந்த கொடைக்கானல் மலைப்பகுதி தொடர் மழை காரணமாக பச்சை பசேல் என எங்கும் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் காணப்படுகிறது.

    வத்தலக்குண்டு - கொடைக்கானல் பிரதான சாலையில் மலைப்பகுதிகளில் ஊற்றெடுத்து புதிய அருவிகள் உருவாகியுள்ளன. இது மலைச்சாலையில் பயணம் செய்பவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    தற்போது சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருக்கிறது. அரையாண்டு தேர்வுக்கு பின்னர் கூட்டம் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மழை தொடர்ந்தால் சுற்றுலா பயணிகளுக்கு விருந்தாக அமையும்.



    Next Story
    ×