search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணா பல்கலைக்கழகம்
    X
    அண்ணா பல்கலைக்கழகம்

    ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலை. தேர்வுகள் அறிவிப்பு

    கனமழை எதிரொலியால் ஒத்தி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைக் கழக தேர்வுகளின் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை :

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  மீண்டும் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய துவங்கியுள்ளது. டிசம்பர் -1 மற்றும் 2ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
     
    கனமழையால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு டிசம்பர் 2ம் தேதி விடுமுறை விடப்பட்டது.

    இதற்கிடையே, கனமழையால் அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும் கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பதிவாளர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், டிசம்பர் 2-ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மறுதேர்வு தேதியை, அண்ணா பல்கலை. இன்று அறிவித்துள்ளது. 
    அதன்படி, அன்று ஒத்திவைக்கப்பட்ட இளநிலை செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 13-ம் தேதியும், முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 31ம் தேதியும் நடைபெற உள்ளது என அறிவித்துள்ளது.
    Next Story
    ×