search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 2-வது நாளாக மழை நீடிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

    ராமநாதபுரத்தில் இடை விடாது பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    ராமநாதபுரம்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு பின் நடப்பாண்டில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நெல் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன.

    ராமநாதபுரம் நகர், பாரதிநகர், கீழக்கரை, ஏர்வாடி, திருப்புல்லாணி பனைக்குளம், உச்சிப்புளி, தேவிபட்டினம் உட்பட பல்வேறு பகுதிகளில் 2-வது நாளாக பெய்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

    இதனால் பொதுமக் களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமம் அடைந்தனர். நெல் வயல்களில் விவசாயிகள் களை பறித்தல், மருந்து தெளித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். அதே நேரம் களை எடுக்க கூலியாட்கள் கிடைக்காததால் விவசாயிகள் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர்.

    குடிமராமத்து பணிகள் நடந்த கண்மாய்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மாவட்ட கலெக்டர் வீர ராகவராவ் உத்தரவின் பேரில், பருவமழை காலத் தில் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

    அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் சிகிச்சைக்காக வருகை தருவோர் குறித்த விவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு குறிப்பிட்ட ஏதேனும் கிராமத்தில் அதிக அளவில் காய்ச்சல் பாதிப்பு வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கிராமத்தில் முழுமையான தூய்மைப்பணிகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதேபோல மொத்தம் 33 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    வாலிநோக்கம்-7.40

    மண்டபம்-35.60

    ராமநாதபுரம்-43

    பாம்பன்-22.40

    ராமேசுவரம்-40.20

    மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் மொத்த மழை அளவு 221.10 மி.மீ., எனவும், சராசரி மழை அளவு 13.82 மி.மீ. எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×