search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம் (கோப்புப்படம்)
    X
    தங்கம் (கோப்புப்படம்)

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்தது

    சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து, ஒரு சவரன் ரூ.29,096-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது.

    நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்தது. இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.3,654க்கு விற்பனையானது. பவுன் விலை ரூ.29,232க்கு விற்கப்பட்டது.

    இன்று (வெள்ளிக்கிழமை) தங்கம் விலை மேலும் குறைந்தது. கிராமுக்கு ரூ.17 குறைந்து ஒரு பவுனுக்கு ரூ.136 குறைந்துள்ளது.

    இதனால் சென்னையில் ஒரு கிராம் தங்கம் இன்று ரூ.3,637-க்கு விற்கப்பட்டது.

    ஒரு பவுன் விலை ரூ. 29 ஆயிரத்து 96-க்கு விற்பனையானது. வெள்ளி விலையும் இன்று சற்று குறைந்தது.
    Next Story
    ×