search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணை
    X
    முல்லைப்பெரியாறு அணை

    பெரியாறு, வைகை அணை நீர்மட்டம் உயர்வு

    கேரளாவில் பெய்த கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை, வைகை அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.
    கூடலூர்:

    கேரளாவில் பெய்த கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 126.40 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 1950 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1600 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணைக்கு நீர்வரத்து 3236 கன அடியாக உள்ளது. இதனால் அணையின் நீர் மட்டமும் 60.27 அடியாக உயர்ந்துள்ளது. பாசனத்துக்காக 3000 கன அடி, குடிநீருக்காக 60 கன அடி என மொத்தம் 3060 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.30 அடியாக உள்ளது. 38 கன அடி நீர் வருகிற நிலையில் 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவான 126.60 அடியை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் 166 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    Next Story
    ×