search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்குதல்
    X
    மின்சாரம் தாக்குதல்

    களக்காடு அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

    களக்காடு அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை காமராஜ்நகரை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 73). இவரது மனைவி புஷ்பம் (62). இவர்களது மகன்கள், மகள்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இதனால் மகாலிங்கமும், அவரது மனைவி புஷ்பமும் தனியாக வசித்து வந்தனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று புஷ்பம் வீட்டில் தண்ணீர் பிடிப்பதற்காக மின் மோட்டாரின் சுவீட்சை போட்டார். அப்போது எதிர் பாராதவிதமாக மின்சாரம் தாக்கி புஷ்பம் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து மகாலிங்கம் களக்காடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லிபிபால்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×