search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில் கொள்ளை
    X
    கோவில் கொள்ளை

    திருச்சிற்றம்பலம் அருகே 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

    திருச்சிற்றம்பலம் அருகே 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சிற்றம்பலம்:

    தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே உள்ள சித்துக்காடு, சித்துக் குளக்கரையில் பாக்கிய சித்திவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் சமீபத்தில்தான் கட்டுப்பட்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது.

    இந்நிலையில் நள்ளிரவு இக்கோவிலில் புகுந்த மர்ம மனிதர்கள் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

    இதேபோல் களத்தூர் முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள, ராக்காச்சி அம்மன், காத்தாயி அம்மன் ஆகிய அம்மன் சன்னதிகளில் இருந்த உண்டியல்களும் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் களத்தூர் அய்யனார் கோவில், சன்னாசி கோவில் ஆகியவற்றிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஆனால், இரண்டு கோவில்களிலும் எதுவும் திருடப்படவில்லை.

    இந்த சம்பவங்கள் குறித்து சித்துக்காடு மற்றும் களத்தூர் கிராம மக்கள் திருச்சிற்றம்பலம் போலீசில் தனித்தனியாக புகார் செய்துள்ளனர். சித்துக்காடு பாக்கிய சித்திவிநாயகர் கோவிலில் மர்ம நபர் கொள்ளையடிக்க முயலும் காட்சி, கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. இதனை ஆதாரங்களுடன் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் துரைராசு திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் செய்துள்ளார்.

    Next Story
    ×