search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந்த்
    X
    விஜயகாந்த்

    திருவள்ளுவர் சிலையை வைத்து அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது -விஜயகாந்த்

    திருவள்ளுவர் சிலையை வைத்து அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பிள்ளையார்பட்டியில் மர்ம ஆசாமிகளால் திருவள்ளுவர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.

    சேதப்படுத்தப்பட்ட திருவள்ளுவர் சிலை மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பல கட்சி தலைவர்களும் நேரில் சென்று திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செய்து வருகின்றனர். இதனிடையே திருவள்ளுவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்ற கருத்து பரவலான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், திருவள்ளுவர் சிலையை வைத்து அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும். அதோடு தமிழுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது.

    இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி, இதுபோன்ற நிகழ்வுகள் மேலும் தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×