search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்காயம்
    X
    வெங்காயம்

    கோவை மார்க்கெட்டில் வெங்காயம் விலை ‘கிடுகிடு’ உயர்வு

    பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் கோவை மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.
    கோவை:

    கோவை மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்தும், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    தற்போது பெய்து வரும் தொடர்மழை காரணமாக பெரிய வெங்காயத்தில் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோவைக்கு பெரிய வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக தற்போது கோவை மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. மொத்த விலையில் கடந்த வாரம் 1 கிலோ ரூ.30-க்கு விற்பனையான பெரிய வெங்காயம் படிப்படியாக உயர்ந்து தற்போது 1 கிலோ ரூ. 60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதே போல சின்ன வெங்காயம் கர்நாடக மாநிலத்தில் இருந்து கோவை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தொடர்மழை காரணமாக சின்ன வெங்காய விளைச்சலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக கோவை மார்க்கெட்டில் கடந்த வாரம் 1 கிலோ ரூ. 30-க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் படிப்படியாக விலை உயர்ந்து தற்போது 1 கிலோ ரூ. 70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வு காரணமாக ஓட்டல் உரிமையாளர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    Next Story
    ×