search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    சேலம் மாவட்டத்தில் மழை நீடிப்பு

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக காடையாம்பட்டி, ஏற்காடு, கரிகோவில், வாழப்பாடி பகுதிகளில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை கன மழையாக கொட்டியது.

    இதனால் அந்த பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையால் மொத்தம் உள்ள 1500-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களில் பெரும்பாலான ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-

    காடையாம்பட்டி 46, ஏற்காடு 43, கரியகோவில் 38, வாழப்பாடி 30, மேட்டூர் 24, பெத்தநாயக்கன்பாளையம் 24, ஆத்தூர் 23, ஆனைமடுவு 20, ஓமலூர் 19.3 கெங்கவல்லி 17.4, சேலம் 14.5, வீரகனூர் 14, தம்மம்பட்டி 13, சங்ககிரி 10, எடப்பாடி 8 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 345 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    Next Story
    ×