search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் சிறை
    X
    புழல் சிறை

    செல்போன், கஞ்சா பதுக்கலா? புழல் சிறையில் திடீர் சோதனை

    புழல் சிறையில் கைதிகள் செல்போன்கள், கஞ்சா மற்றும் போதை பொருட்களை பயன்படுத்துவதாக புகார்கள் வந்ததை அடுத்து போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

    செங்குன்றம்:

    புழல் மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் மற்றும் பெண் கைதிகளுக்கு என தனித்தனி ஜெயில்கள் உள்ளன. அவற்றில் விசாரணை சிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.

    தண்டனை சிறையில் 700-க் கும் மேற்பட்ட கைதிகளும், பெண்கள் சிறையில் 180-க்கும் மேற்பட்டோரும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    இங்கு உள்ள கைதிகள் செல்போன்கள், கஞ்சா மற்றும் போதை பொருட்களை பயன் படுத்துவதாக ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து இன்று காலை மாதவரம் போலீஸ் துணை கமி‌ஷனர் ரவளி பிரியா தலைமையில் புழல் சிறையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    இதில், உதவி கமி‌ஷனர்கள் ராமலிங்கம், ரவி, ஜெயில் சூப்பிரண்டுகள் செந்தாமரை கண்ணன், செந்தில் குமார், இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், ஆனந்த, வசந்தன், தங்கதுரை மற்றும் 29 சப்-இன்ஸ்பெக்டர்கள் 59 போலீசார் ஈடுபட்டனர்.

    அவர்கள் புழல் சிறையில் காலை 6 மணிமுதல் 9 மணி வரை சோதனை நடத்தினர். ஆனால் சிறையில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட எதுவும் சிக்க வில்லை என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×