search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஊத்துக்கோட்டை தொழில் அதிபரிடம் நகை திருடிய கொள்ளையன் கைது

    ஊத்துக்கோட்டை தொழில் அதிபரிடம் நகை திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாராட்சி கிராமத்தை சேர்ந்தவர் அஜீம்பாய். தொழில் அதிபர்.

    இவர் 3 மாதங்களுக்கு முன் ஊத்துக்கோட்டையில் உள்ள ஒரு வங்கி லாக்கரில் இருந்த 60 சவரன் தங்க நகைகளை எடுத்து மோட்டார் சைக்களில் வைத்து கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார். இடையில் நாகலாபுரம் ரோட்டில் உள்ள எலக்ட்ரானிக் கடை எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

    பொருட்களை வாங்கி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளின் பெட்டி உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைத்திருந்த நகைப் பை காணவில்லை.

    மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்து அஜீம்பாய் ஊத்துக்கோட்டை போலிஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீசார் அருகில் உள்ள சி.சி. டி.வி. கேமராவை ஆய்வு செய்து பார்த்த போது ஒருவர் மோட்டார் சைக்கிளின் பெட்டியை உடைத்து நகை பையை திருடி சென்ற காட்சி பதிவாகியிருந்தது.

    இது தவிர திருவள்ளூர், வெள்ளவேடு, பொன்னோரி பகுதிகளில் புதிய யுக்தியை கொண்டு பணம் திருடும் சம்பவங்கள் நடைபெற்றன. வங்கிகளில் பணம் எடுத்து மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களை பின் தொடர்ந்து சென்று ரூ. 100 அல்லது ரூ.500 நோட்டை கீழே போட்டு இந்த பணம் உங்களுடையதுதானா என்று கேட்டார்கள்.

    மோட்டார் சைக்கிளில் செல்பவர் உடனே வண்டியை நிறுத்தி கீழே விழுந்து கிடக்கும் ரூபாய் நோட்டை எடுப்பதற்குள் மோட்டார் சைக்கிளில் உள்ள பணத்தை அவர்கள் திருடிச் சென்று விடுவார்கள்.

    இந்த புதுயுக்தியை பயன்படுத்தி பணம் திருடும் கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அரவிந்தன் ஊத்துக்கோட்டை துணை போலிஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் ஊத்துக்கோட்டை பஸ் நிலையம் பகுதியில் நேற்று மாலை இன்ஸ்பெக்டர் ரமேஷ், போலீசாருடன் ரோந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவர் சந்தேகப்படும்படி நடமாடிக் கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.

    அவரை தீவிர விசாரணை செய்ததில் அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி அருகே உள்ள ஓஜிகுப்பம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் (45) என்பது தெரிந்தது. இவர் தாராட்சி கிராமத்தை சேர்ந்த அஜீம்பாய் மோட்டார் சைக்கிளின் பெட்டியை உடைத்து நகைகள் திருடியது தெரிய வந்தது. மேலும் திருவள்ளூர், வெள்ளவேடு, பொன்னேரி பகுதிகளில் புதுயுக்தியை பயன்படுத்தி ரூ.5 லட்சம் பணம் கொள்ளையடித்து விசாரணையில் தெரிய வந்தது.

    கிருஷ்ணனிடமிருந்து போலீசார் ரூ.3 லட்சத்து 45 ஆயிரம் ரொக்கம், 25 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் அவரை ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×