search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோ
    X
    வைகோ

    விக்கிரவாண்டி - நாங்குநேரி தொகுதிகளில் வைகோ 2 நாள் பிரசாரம்

    விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் மற்றும் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.
    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. வேட்பாளர் மற்றும் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரசாரம் செய்கிறார்.

    இன்று அவர் விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் செய்கிறார். மாலை 4.30 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் அவர் நேமூர், பனமலை, கெடார், விக்கிரவாண்டி, ராதாபுரம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    நாங்குநேரி தொகுதி

    வருகிற 12-ந்தேதி நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம் செய்கிறார். அன்று மாலை 4.30 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் அவர் மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி, ஏர்வாடி, திருக்குறுங்குடி, களக்காடு ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

    Next Story
    ×